Monday, October 21, 2013

சிதம்பர ரகசியம் *

சிதம்பர ரகசியம்
****************

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் "திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது "மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன, இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.


ganesan pondicherry 

Thursday, October 17, 2013

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

Ganesan Pondicherry

Sunday, October 13, 2013

ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகளின் ஜீவ சமாதி புதுச்சேரி சுதேசி காட்டன் மில் எதிரில் உள்ள கோவிந்தசாமி முதலியார் தோட்டத்தில் உள்ளது. அந்த சமாதி ஒரு வீட்டின் முற்றம் போல் ஆகிவிட்டது.

இங்கு ஒரு மெக்கானிக் கடையின் பக்கத்தில் செல்லும் ஒரு ஒற்றை அடி பாதை வழியாக மட்டுமே சென்று தரிசனம் செய்யும் நிலையில் உள்ளது. இவர் தனிமையில் தன்  சிந்தனையில் மனதை ஒருநிலையில் கட்டுபடுத்தியவர்.

அப்படி கட்டு படுத்தும் பயிற்சிக்காக ஒரு கையில் தன் கட்டை விரலை மண்ணில் வைத்துக்கொண்டு உருட்டிக்கொண்டு இருப்பார். இதனால் இவரை மண்ணுருட்டி சாமிகள் என்று அழைத்தனர். இவர் 1965  ம் ஆண்டு ஜனவரி மாதம் 16 -ம் தேதி ஜீவ சமாதி அடைந்தார்.

ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகளின் கோவில்

பாண்டிசேரியில் மிக சிறப்பு வாய்ந்த சித்தர் ஆவார். ஏன் என்றால் இவர் சித்தர்களுக்கு எல்லாம் குரு என்று சொல்லலாம். இவர் ஜீவ சாமாதி பாண்டிச்சேரியில் முத்தியால்பேட்டையை அடுத்த கருவடிகுப்பத்தில் பாத்திமா பள்ளியின் எதிரில் உள்ளது.

இங்கு சென்றுவந்தால் பில்லி,சூனியம் எல்லாம் ஓடிவிடும், மன அமைதி கிடைக்கும்.இங்குதான்  பாண்டிசேரியில் உள்ள எல்லா சித்தர்களும் வந்து தங்கி சென்றிருகிறார்கள்.

பாரதியாரும் இங்க வந்து அடிக்கடி குயில் பாட்டு எழுதி உள்ளார். இவருக்கு குரு பூஜை வைகாசி மாதம் 15ம்  தேதி மிக சிறப்பாக நடைபெறுகிறது.

guru sithanandhar temple
guru sithanandhar temple


guru sithanandhar temple
                                           இது கோவிலின் முகப்பு தோற்றம்

guru sithanandhar temple
                                      பாரதியார் இங்கு வந்ததற்கான அடையாள சின்னம்.

guru sithanandhar
                                    ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகளின் திரு உருவம்.

guru sithanandhar temple
 இவர்கள் கம்பளி சித்தர்( இடது ) மற்றும் தொள்ளைகாது  சித்தர் (வலது ). 
guru sithanandhar temple
இவர்கள் கதிர்வேல் சுவாமிகள் ( இடது ) மற்றும் அக்கா சுவாமிகள் ( வலது ).
guru sithanandhar temple

                                   இது அக்கோவிலினுள் அமைந்திருக்கும் திருக்குளம்

ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகளின் ஜீவ சமாதி கண்டமங்கலம் சின்னபாபு சமுத்திரம்




விழுப்புரதிலிருந்து புதுவை செல்லும் 20 கிலோமீட்டர் தொலைவில் கண்டமங்கலம் ரயில்வே கேட் உள்ளது. இதன் இடது புறத்தில் 2 கீ.மீ தொலைவில் சின்னபாபு சமுத்திரம் என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு மஹா சித்த புருஷரான ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் தன் ஜீவ சமாதியில் இருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அற்புத ஆற்றல் படைத்த சித்தர் இவர்.

ஸ்ரீ படே சாஹிப் சித்தர் அமைதியானவர். இப்புனித பெரியவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் மதங்களை தாண்டி அருள் செயல் புரிபவர். "படே" என்றால் பெரிய என்று பொருள். ஆதலால் மக்கள் இவரை "படே சாயபு" என்று அழைத்தனர்.

இவர் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து வைத்தியம் செய்வார். மக்கள் குறைகளை கேட்டு தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவர். பச்சிலைகளை அரைத்து நோய்களை தீர்ப்பார். விபூதியை பிரசாதமாக  கொடுப்பார். சிரசில் கைவைத்து நோயின் கொடுமையை குறைப்பார். சிறிது நேரத்தில் நோய் வந்த சுவடு தெரியாமல் பறந்து ஓடிவிடும்.


 



இங்கு உள்ள படங்கள் சுற்று பிரகாரத்தில் உள்ள படே சாஹிப் ஐயாவின் உருவ சிலைகள் . 
 
படே சாஹிப் ஐயாவிற்கு சமர்பிக்கப்படும் பூக்கள்,பொரி,பிஸ்கட்கள்,ஊதுபத்தி போன்ற பொருட்கள் விற்கும் இடம்.(பீடத்தின் வாசல்)
படே சாஹிப் ஐயா அவர்களால் வணங்கப்பட்ட சிவன் கோவில்
சிவன் கோவிலுக்கு வெளியில் உள்ள விருட்சத்தின் அடியில் அமைந்து இருக்கும் நாகங்களின் உருவ சிலைகள்.



இது சித்தர் பீடத்தின் முகப்புத் தோற்றம்.

பஞ்ச பட்சி சாஸ்திரம்

பஞ்ச பட்சி சாஸ்திரம்

ஆய கலைகள் என போற்றப்படும் 64 -கலைகளை யும் விட மேன்மை பெற்ற கலைகளாக விளங்குவது நான்கு கலைகள் ஆகும் அதுவே சரகலை:பஞ்சபட்சி: கெவுளி சாஸ்திரம்: கொக்கோகம்: என்ற நான்கு வித சித்தர் கலைகள் ஆகும்.

இந்த அபூர்வ சாஸ்த்திரங்களை யோகிகள்"ஞானிகள்" முனிவர்கள்"சித்தர்களும் பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.

இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்து குருவின் திருப்பாதமே கதி என இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்கு மட்டும் இக் கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.

இதில் பஞ்சபட்சி சாஸ்திரம் எனப்படும் மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்தி உமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும்.

தமிழ்க் கடவுளாகிய சுப்பிரமணியர் சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகிய மகாசக்தியால் சுப்பிரமணியருக்கு உபதேசித்த உன்னத கலையாகும் "பஞ்ச பட்சி சாஸ்திரம்" இதனையே சூரனை வதம்செய்ய முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.

சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனி யாகிய அகத்திய முனிவருக்கு முருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.


அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.


பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும்.

நவக்கிரகங்கள்,பன்னிரு இராசிகள்,இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் - 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.

பஞ்சபூதம் எனப்படும் நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும் வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்,என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.

சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
பட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதே
பல்லி சொல்பவனிடம் பதில் பேசாதே
என்பது பெரியோர் வாக்குவாகும்.

மேற்கண்டபடி பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும் வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான்.இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம் அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை,சிலம்பம் ,பிரச்சனை வழக்குகள்,போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர்.

அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரை வாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான்,அவனை எவரும் வெல்ல முடியாது என்பது அறுதியிட்ட உண்மையாகும்.

இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம்,செய்தொழில்,காரியங்கள்,வாழ்க்கையில் முன்னேற புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.மேலும்

நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு.நாள் ,திதி ,நட்சத்திரம் ,யோகம் ,கரணம் ,நேரம் ,லக்கினம் ,போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.

இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.

உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும்.அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும்.அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ,அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும்.

எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்திபெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன், தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச்செய்யலாம்.


சித்தர்கள் இயற்றிய பஞ்சபட்சி சாஸ்திரம் பற்றிய நூல்கள் அனைத்தும் பூட்டு மட்டுமே,இவற்றின் "திறவுகோல்"ஒரு சில ஆசான்களிடம் மட்டுமே உள்ளது.அதில் குறிப்பிடப்படும் குருகுலமாக எமது "சித்தர் வேதா குருகுலம்"மட்டுமே இன்று உள்ளது.மேலும் இதன் வெளிவராத பல உண்மை இரகசியங்கள் இங்கு பயிற்றுவிக்கப் படுகின்றது.என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

1 -இன்றைய நடைமுறையில் உள்ள பஞ்சபட்சி சாஸ்த்திர நூல்கள் அனைத்தும் ஒரு மூலநூலைப் பார்த்து பிரதி எடுக்கப் பட்டவை என்ற உண்மை விளக்கம்.

2 -"பஞ்சபட்சி வசிய சித்தி" முறை இரகசியம்.இதனை சித்தி செய்தால் மட்டுமே பஞ்சபட்சி எனப்படும் இந்த பஞ்சபூத சாஸ்த்திரம் நமக்கு கட்டுப் பட்டு பூரணமாக வேலை செய்யும்.

3 -"நங்கிலி" என்னும் மூலிகையின் உண்மை இரகசியம். இதன் தெளிவான நேரடி விளக்கம்.

4 -"பஞ்சபட்சி திறவுகோல் இரகசியம்" இந்த இரகசியத் திறவு கோல் மூலமாகத்தான் சித்தர்கள் பஞ்சபட்சி சாஸ்த்திரத்தின் அந்தர நாழிகை,ஜாமம் கணக்கிடும் முறை,எதிரி பட்சியை கணிப்பது, படுபட்சி அறிவது,வளர்பிறையில்,தேய்பிறையில் பட்சிகள் ஜாமம் மாறும் இரகசியம், போன்றவை களை கணித்தார்கள்.இந்த திறவுகோல் இதுவரை எந்த ஒரு சித்தர் நூலிலும் மற்றும் ஓலைச்சுவடி களிலும் பதிவு செய்யப்பட வில்லை.சித்தர் குருகுல பாரம்பரிய முறையில் நேரடி உபதேசமாக மட்டுமே கொடுக்கப்பட்டு வரப்படுகின்றது.

5 - "சிதம்பர இரகசியம்" என்னும் பஞ்சாட்சர மாறல் இரகசிய பிரயோக முறை விளக்கங்கள்.

6 -பஞ்ச பட்சி சாஸ்த்திர முறையில் அஷ்ட கர்ம பிரயோக முறை இரகசிய விளக்கங்கள்.வசியம்,மோகனம்,தம்பனம், ஆகர்ஷணம்,வித்துவேசனம், போன்றவைகளை அனுபவ முறையில் பிரயோகிக்கும் வழி முறைகள்.

"குருவும் தாரமும் வாய்ப்பது இறைவன் செயல்" என்பதற்கிணங்க சித்தர் கலைகளில் உள்ள சூட்சும இரகசியங்களை கற்பிக்கும் குரு கிடைக்க இறைவனின் பேரருள் வேண்டும்.

தொட்டுக் காட்டாத வித்தை
சுட்டுப் போட்டாலும் வராது என்பதற்கிணங்க
இக்கலையின் அதிநுட்ப இரகசியங்களை குருமுறையில் கற்றுக்கொள்ளலாம்.ஜோதிடர்கள் மற்றும் மாந்திரீகம் தொழில் புரிவோருக்கும் சித்தர் கலை ஆர்வலர்களுக்கும் இக்கலையினைக் கற்க ஒரு அரிய வாய்ப்பு.


நன்றி !
இமயகிரி சித்தர்...
8

Saturday, September 28, 2013

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.


உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம். அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார். வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார். அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார். வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை. அது ஒரு “தகரவர்க்க”ப் பாடல். முற்றிலும் “த” என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. “ஏகாக்ஷரப் பாடல்” என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர். வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே ‘வில்லி பாரதம்’ என்று வழங்குகிறது. பாடலைப் பார்ப்போம்: “திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே” இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார். திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை, திதி – திருநடனத்தால் காக்கின்ற தாதை – பரமசிவனும் தாத – பிரமனும் துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய தா – இடத்தையும் தித – நிலைபெற்று தத்து – ததும்புகின்ற அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு ததி – தயிரானது தித்தித்ததே – தித்திக்கின்றதென்று து – உண்ட கண்ணனும் துதித்து – துதி செய்து வணங்குகின்ற இதத்து – பேரின்ப சொரூபியான ஆதி – முதல்வனே! தத்தத்து – தந்தத்தையுடைய அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு தாத – தொண்டனே! தீதே – தீமையே துதை – நெருங்கிய தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும் அதத்து – மரணத்தோடும் உதி – ஜனனத்தோடும் தத்தும் – பல தத்துக்களோடும் அத்து – இசைவுற்றதுமான அத்தி – எலும்புகளை மூடிய தித்தி – பையாகிய இவ்வுடல் தீ – அக்கினியினால் தீ – தகிக்கப்படுகின்ற திதி – அந்நாளிலே துதி – உன்னைத் துதிக்கும் தீ – புத்தி தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும் இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் “திதத்தத்தத்” என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை “மடக்கு” அல்லது “யமகம்” என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை “அந்தாதி” என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன. உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.